Company Profile

 

இலங்கையில் மோட்டார் வாகனத்துறையில் முன்னோடியாக விளங்கும் அசோசியேட்டட் மோட்டர்வேஸ் (பிரைவேட்) லிமிடட், 64 வருடங்களுக்கு முன்னர் 1949 இல் ஒருங்கிணைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் நிருவமானது 'AMW கேப்பிட்டல் லீசிங் மற்றும் ஃபினான்ஸ் பீ.எல்.சீ' நிறுவனத்தை ஸ்தாபித்ததன் மூலமாக, துணிகரமாக நிதியியல் சேவைக்குள் பிரவெசித்தது. 2006 ஜூலை 5 ஆம் திகதி, விஷேடமான லீசிங் நிறுவனமாக, "AMW Capital Leasing Ltd" என்ற பெயரின் கீழ் நிறுவனம் ஒருங்கிணைக்கப்பட்டது. 2008 நவம்பரில் இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையால் 'நிதி நிறுவனம்' என்ற தராதரத்தைப் பெற்றதோடு. பொதுமக்களிடமிருந்து வைப்புகளை ஏற்றுக்கொள்வதற்கான ஒப்புதலையும் பெற்றுக்கொண்டது. 2011 ஆகஸ்டில் 'AMW கேப்பிடல் லீசிங் மற்றும் ஃபினான்ஸ் பீ.எல்.சீ கொழும்பு பங்குஸ்சந்தையில் பட்டியல்படுத்தப்பட்டதுடன், பொதுமக்களால் மேற்கோள்காட்டப்பட்ட நிறுவனமாகவும்மாறியது.

2008 இல், அல் ஃபுட்டெய்ம் குழுவிற்கு முற்றிலும் சொந்தமான துணை நிறுவனமான அழ ஃபுட்டெய்ம் இன்ஜினியரிங் (Al Futtaim Engineering - AFE) நிறுவனத்தால் கைய்யாக்கப்படுத்தப்பட்டது. 1930 ஆம் ஆண்டில் வர்த்தக வணிகமாக நிறுவப்பட்ட அல் ஃபுட்டெய்ம் குழு, பஹ்ரைன், குவைத், கத்தார், ஓமான் மற்றும் சவுதி அராபிய ஆகிய நாடுகளில் தனது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், எகிப்து, சிரியா, இலங்கை, பாக்கிஸ்தான், சிங்கப்பூர்,ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பாலும் தனது வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்துயுள்ளது. 65ற்கும் மேற்பட்ட நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுள்ள தொன்மை வாய்ந்த வர்த்தகக் குழுமமான அல் ஃபுட்டெய்ம், பல்பரிமாணமுள்ள கண்டுபிடிப்பாளராகக் கருதப்படுவதோடு, ஐக்கிய அரபு இராசியத்தின் பல்வேறுபட்ட என்ற பெயரின் உள்ளார்ந்த நம்பிக்கையுடன் தலைமுறைகள் பல கடந்தும் வளர்சசியடைந்துள்ளது.

'AMW கேப்பிடல் லீசிங் மற்றும் ஃபினான்ஸ் பீ.எல்.சீ' நிறுவனம் தொழிற்துளையில் முன்னோடியான அதன் தலைமை நிறுவனம் அசோசியேட்டட் மோட்டர்வேஸ் (பிரைவேட்) லிமிடேட்டின் நம்பகம்மிக்க தலைமைத்துவம் மற்றும் வலிமையுடன் நிறுவப்பட்டுள்ளது. மேலும் டுபாய் அல் ஃபுட்டெய்ம் குழுவின் பின்புலத்துடன் வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அனைத்துவிதமான நிதித்தேவைகளுக்கும் உதவுவதோடு, நீங்கள் எங்களோடு இணைந்திருந்தால், உங்கள் எதிர்பார்ப்புகள் எதுவாக இருந்தாலும், எங்கள் தலைமைத்துவம், நம்பிக்கை, உறுதிப்பாடு மற்றும் நிதிப்பதுகாப்பு ஆகியவற்றுடன் நாம் சிறந்த சேவையை உங்களுக்கு வழங்குவோம் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.